இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், தனது நீண்டகால தோழியான வன்ஷிகா சிங்கை நேற்று (சனிக்கிழமை மார்ச் 14) கரம் பிடித்தார்.
இந்திய அணி அண்மையில் டி20 உலகக்கோப்பை 2026 தொடரை வென்று சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்த மகிழ்ச்சியில் இருந்த குல்தீப், தற்போது தனது புதிய வாழ்வைத் தொடங்கியுள்ளார்.
கான்பூரைச் சேர்ந்த குல்தீப் யாதவ் மற்றும் வன்ஷிகா ஆகிய இருவரும் சிறு வயது முதலே நண்பர்கள். வன்ஷிகா எல்.ஐ.சி நிறுவனத்தில் அதிகாரியாகப் பணிபுரிகிறார்.
இவர்களின் திருமணம் கடந்த 2025 நவம்பர் மாதம் நடக்கவிருந்த நிலையில், குல்தீப் யாதவ்யின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் காரணமாக மார்ச் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், உத்தராகண்ட் மாநிலம் முசோரியில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் குல்திப் சிங் – வன்ஷிகாவின் திருமணம் பிரமாண்டமான முறையில் நடந்தது.
முசோரியின் அழகிய மலைப்பகுதிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த ராயல் திருமணத்தில், குல்தீப் யாதவ்வின் நெருங்கிய நண்பரும் கிரிக்கெட் வீரருமான யுஸ்வேந்திர சஹால், ரின்கு சிங் மற்றும் பயிற்சியாளர் டி.திலீப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஹல்தி மற்றும் மெஹந்தி சடங்குகளின்போது சஹால் உற்சாகமாக நடனமாடி திருமண வீட்டை அதிரவைத்தார்.