மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் காலை முதல் தங்களின் வாக்கைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜம்மு – காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியின் சுயேச்சை எம்பியான ரஷீத், பரோலில் நாடாளுமன்றத்துக்கு வந்து வாக்களித்துள்ளார்.
வாக்களிக்க வருகை தந்த ரஷீத்தை மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு கட்டியணைத்து வரவேற்றார்.
தேர்தலில் வாக்களிக்க தில்லி உயர் நீதிமன்றம் ரஷீத்துக்கு அனுமதி வழங்கியிருந்தது. முன்னதாக, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கலந்துகொள்ள ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4 வரை நீதிமன்றத்தால் ரஷீத்துக்கு காவல் பரோல் வழங்கப்பட்டது.
பொறியாளரான ரஷீத், கடந்த மக்களவைத் தோ்தலில் ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, சிறையில் இருந்தபடியே வெற்றிபெற்று எம்.பி.யாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.