ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் சிறையிலிருந்து வெளியான பதிவு குற்றவாளி பட்டபகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கஞ்சம் மாவட்டத்தின் துலசிப்பூர் பஞ்சாயத்து தலைவரான மினாத்தி தாஸ் என்பவரின் கணவர் ரபிந்திர தாஸ் (வயது 41) பதிவு குற்றவாளியான இவர் மீது 41 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த குற்றவழக்குகளினால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் கடந்த 3 மாதஙக்ளுக்கு முன்பு விடுதலையானார்.
இந்நிலையில், நேற்று (மார்ச் 5) காலை 7 மணியளவில் கிராமத்தின் சாலையில் ரபிந்திர தாஸ் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை 6 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்து கூர்மையான ஆயுதங்களினால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவயிடத்திலேயே பலியானார்.
இதையும் படிக்க: காதல் விவகாரத்தில் மகளை ஆணவக் கொலை செய்து உடலை எரித்த தந்தை!