எந்தவிதமான சிற்ப பொருள்களைச் செய்வீர்கள்?
வீட்டு பூஜைக்கான சிறிய விக்ரகங்களிலிருந்து கோயில்களில் நிறுவப்படும் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகள், மிகப்பெரிய அளவிலான உலோகச் சிலைகள் வரை செய்வேன். ஒவ்வொரு விக்ரகமும் நட்சத்திரம், திதி, யோகம், கரணம், ஜீவன், நேத்திரம் போன்ற ஆன்மிகக் கூறுகளைப் பார்த்து, பாரம்பர்ய “லாஸ்ட் வேக்ஸ்” முறையில்தான் உருவாக்குவோம். இந்த முறையே எங்களுடைய சிலைகளுக்கு உயிரோட்டமும் தனித்துவமும் அளிக்கிறது.
தற்போது காமதேனு விக்ரகம் மற்றும் ஆலயம் உருவாக்கி வருகிறோம். அது சுமார் 7 அடி உயரம், 3½ டன் எடையுடன் கூடிய காமதேனு விக்ரகம், 16 அடி உயர கற்பக விருட்ச மரம் மற்றும் 6 அடி ஆதார பீடத்துடன் ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஆன்மிகம் மற்றும் சிற்பக்கலை இரண்டையும் இணைக்கும் ஓர் அபூர்வ முயற்சி என்றே சொல்லலாம்.
என்னுடைய கலைச்சேவையை பாராட்டி அரசு பல்வேறு விருதுகளை எனக்கு கொடுத்திருக்கிறது. இந்திய அரசிடமிருந்து பத்ம ஸ்ரீ விருது பெறுவது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது” என மனம் நெகிழ்கிறார் ராஜா ஸ்தபதி.