சிவகங்கையில் முதல்வர் கோப்பை வாலிபால் போட்டி: அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார் | Minister Udayanidhi Inaugurated the CM’s Cup Competition at Sivaganga

1308855.jpg
Spread the love

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான வாலிபால் (கையுந்து) போட்டியை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார். தொடர்ந்து உள் விளையாட்டரங்கில் இறகு பந்து போட்டியையும் அமைச்சர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், விளையாட்டுத் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர், செயலர் மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து உதயநிதி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார்.

முன்னதாக மதுரையில் இருந்து காரில் வந்த அமைச்சர் உதயநிதிக்கு சிவகங்கை மாவட்ட எல்லையான பூவந்தியில் திமுக சார்பில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சிவகங்கை நகராட்சித் தலைவர் சிஎம்.துரை ஆனந்த், திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கை மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *