சிவகாசியில் ஆணவக்கொலை; தங்கையின் கணவரைக் கொன்ற சகோதரர்கள்!

Dinamani2f2024 062f09f368c7 6501 4531 8e84 216f1a83439b2fani 20240628103743.jpg
Spread the love

சிவகாசியில் தங்கையை காதலித்து திருமணம் செய்தவரை, தங்கையின் சகோதரர்கள் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசியில் நந்தினி குமாரி என்பவரை கார்த்திக் பாண்டியன் காதலித்து வந்துள்ளனர்; ஆனால், நந்தினியின் சகோதரர்கள் பாலமுருகன் (27) மற்றும் தனபாலா (26) இருவரும் நந்தினியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், நந்தினியும் கார்த்திக்கும் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். பின்னர், கார்த்திக்கும் நந்தினியும் வெவ்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக கார்த்திக்கும் நந்தினியும் பைக்கில் சென்றுள்ளனர். அப்போது, நந்தினியின் சகோதரர்கள் இருவரும் மற்றும் அவர்களுடன் வந்திருந்த சிவா (23) என்பவரும் அவர்களை வழிமறித்துள்ளனர். அவர்கள் மூவரிடமுமிருந்து கார்த்திக்கும் நந்தினியும் தப்பித்துச் செல்ல முயன்றபோது, கார்த்திக்கை ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

இதனால், காயமடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, கார்த்திக்கை விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், கார்த்திக் முன்னரே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்ப்பட்டு, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார்த்திக்கும் நந்தினியும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் தான், கார்த்திக் கொலை செய்யப்பட்டார் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஃபெரோஸ் கான் அப்துல்லா, இந்த கொலை சம்பவம் ஆணவக்கொலை தொடர்புடையது என்று கூறுகிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *