சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு | Four workers killed at firecracker unit in Sivakasi

1370243
Spread the love

சிவகாசி: சிவகாசி அருகே நாரணாபுரம் பட்டாசு ஆலையில் இன்று (திங்கள்கிழமை) மாலை ஏற்பட்ட வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் நாரணாபுரம் – அனுப்பங்குளம் சாலையில் ஶ்ரீ மாரியம்மன் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு( பெசோ) உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் 40-க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்சி ரக பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்நிலையில் இன்று மாலை 3.40 மணி அளவில் பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த சிவகாசி தீயணைப்பு துறையினர், தீயை அணைத்து, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

17530975402027

17530975482027

இந்த விபத்தில் 4 தொழிலாளர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *