சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளர்களின் வீடு, அலுவலகங்களில் 2-வது நாளாக வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை | Income Tax Department officials raid the homes and offices of Sivakasi cracker factory owners for the second day

1372882
Spread the love

சிவகாசி: சிவ​காசி​யில் பட்​டாசு ஆலை உரிமை​யாளர்களின் வீடு மற்றும் அலு​வல​கங்​கள், டிரான்​ஸ்​போர்ட் நிறு​வனங்​களில் 2-வது நாளாக நேற்​றும் வரு​மான வரி சோதனை நடை​பெற்​றது. சிவ​காசி​யில் உள்ள 2 பட்​டாசு நிறுவன உரிமை​யாளர்​களின் வீடு​கள் மற்றும் அலு​வல​கங்​கள், சிவ​காசி​யில் இருந்து வடமாநிலங்​களுக்கு பட்​டாசுகளை கொண்டு செல்​லும் 2 டிரான்​ஸ்​போர்ட் நிறுவனங்கள் உட்பட 8 இடங்​களில் வரு​மான வரித்​துறை அதி​காரி​கள் குழுவினர் நேற்று முன்​தினம் காலை 10 மணி முதல் சோதனை​யில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

இந்த சோதனை​யில் பட்​டாசு விற்​பனை ஆவணங்​கள், வங்கி பரிவர்த்​தனை​கள் உள்​ளிட்ட பல்​வேறு விவரங்​களை சேகரித்த வரு​மான வரித்​துறை அதி​காரி​கள், அதுகுறித்து உரிமை​யாளர்​கள் மற்​றும் பங்​கு​தா​ரர்​களிடம் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், 2-வது நாளாக நேற்​றும் காலை 10 மணி முதல் 8 இடங்​களி​லும் வரு​மான வரித் துறை​யினர் சோதனை நடத்​தினர். டிரான்​ஸ்​போர்ட் நிறு​வனங்​களில் இருந்து எவ்​வளவு பட்​டாசுகள் வடமாநிலங்​களுக்கு கொண்டு செல்​லப்​பட்​டன, யாரிட​மிருந்து யாருக்கு அனுப்​பப்​பட்​டது போன்ற விவரங்​களை ஆய்வு செய்து வரு​கின்​றனர்.

வட மாநிலத்​தில் ஒரே இடத்​தில் சிக்​கிய ஏராள​மான பட்​டாசுகளுக்கு வரி செலுத்​தப்​ப​டாதது தெரிந்​ததால், அந்த பட்​டாசுகளை தயாரித்த நிறு​வனங்​கள், வாக​னங்​களில் கொண்​டு​சென்ற டிரான்​ஸ்​போர்ட் நிறு​வனங்​களில் சோதனை நடப்​ப​தாக​வும், இதில் சிக்​கி​யுள்​ள ஆவணங்​கள்​ அடிப்​படை​யில்​ வி​சா​ரணை நடப்பதாக​வும்​ தகவல்​ வெளி​யாகி​யுள்​ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *