சிவகாசி அருகே கொங்கலாபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் நுழைவு வாயில் கேட் மற்றும் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொங்கலாபுரத்தைச் சேர்ந்த ராஜாமணி என்பவரது வீட்டின் நுழைவு வாயில் கேட் அருகே விளையாடிக் கொண்டிருந்த அவரது 9 வயது மகள் மற்றும் உறவினர் ரமேஷ் என்பவரது 4 வயது மகள் ஆகிய இருவரின் மீதும், திடீரென வீட்டின் நுழைவு வாயில் கேட் மற்றும் அதனுடன் இணைந்திருந்த சுவர் முழுவதும் இடிந்து விழுந்தன.
கனமான கேட் மற்றும் சுவரின் கீழ் சிக்கி படுகாயமடைந்த இரு சிறுமிகளும் உடனடியாக மீட்க முடியாத நிலையில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
சுற்றியிருந்த பொதுமக்கள் உடனடியாக மீட்பு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், கனமான கட்டுமானப் பொருட்களின் கீழ் சிக்கியிருந்த சிறுமிகளைக் காப்பாற்ற முடியவில்லை.

தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிரிழந்த இரு சிறுமிகளின் உடல்களையும் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.