சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ பட ரிலீஸ் தேதி மாற்றம்! |Sivakarthikeyan’s ‘Parasakthi’ release date changed!

Spread the love

பொங்கல் பண்டிகை வெளியீடாக இத்திரைப்படம் வருகிற ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

கடந்த சில நாட்களாக இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படுவதாகவும், அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்பாகவே படம் வெளியாகவிருக்கிறது என பேசப்பட்டு வந்தது.

தற்போது தயாரிப்பு நிறுவனமும் மாற்றப்பட்ட ரிலீஸ் தேதியையும் அறிவித்திருக்கிறது.

திட்டமிடப்பட்டிருந்த தேதியிலிருந்து 4 நாட்களுக்கு முன்பாகவே, அதாவது ஜனவரி 10-ம் தேதியே ‘பராசக்தி’ படம் திரைக்கு வருகிறது.

பராசக்தி படத்தில்...

பராசக்தி படத்தில்…

விஜய் நடித்திருக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

‘பராசக்தி’ வெளியாவதாக திட்டமிட்டிருந்த தேதியில் இரண்டு தெலுங்கு திரைப்படங்கள் வெளியாவதால், படத்தின் ரிலீஸ் தேதியை முன்கூட்டியே செய்திருப்பதாக பேசப்படுகிறது.

ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது குறித்து தயாரிப்பு நிறுவனம், “‘பராசக்தி’ திரைப்படத்தின் வெளியீடு ஜனவரி 10-ம் தேதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

இந்த முடிவு, உலகெங்கிலுமுள்ள விநியோகஸ்தர்களின் ஆலோசனைகளுக்குப் பிறகும் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்குப் பிறகும் எடுக்கப்பட்டுள்ளது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *