சிவகார்த்திகேயனின் ஹவுஸ் மேட்ஸ்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

dinamani2F2025 04 102F40z2vqo82FCapture
Spread the love

சிவகார்த்திகேயனின் ஹவுஸ் மேட்ஸ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேண்டெசி கலந்த ஹாரர் காமெடி திரைப்படமாக வெளியான திரைப்படம் ஹவுஸ் மேட்ஸ். இந்தப் படம் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில், நடிகர் தர்ஷன் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் நடிகர் காளி வெங்கட் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் இந்தப் படத்தில், நடிகர்கள் அர்ஷா பைஜு, வினோதினி, தீனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

எஸ். விஜயபிரகாஷ் தயாரிக்க, நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் வழங்கிய இந்தப் படத்துக்கு, ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், ஹவுஸ் மேட்ஸ் திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வரும் செப். 19 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

The OTT release date of Sivakarthikeyan Housemates has been announced.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *