ஆச்சரியமாக, சிவகார்த்திகேயனின் பல படங்களுக்கு பழைய படங்களின் பெயர்களே வைக்கப்பட்டிருக்கின்றன. எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, வேலைக்காரன், ஹீரோ (ஹிந்தி), டான் (ஹிந்தி) மாவீரன், அமரன், பராசக்தி மற்றும் மதராஸி என பெரும்பாலும் பழைய படங்களின் பெயர்களே எஸ்கேவுக்கு கிடைத்து வருகிறது.
இருப்பினும், இவற்றில் ஹீரோ மற்றும் வெளியாகாத படங்களைத் தவிர்த்து பிற அனைத்து படங்களும் ஹிட் அடித்தவை என்பது குறிப்பிடத்தக்கது.