கவின் நடிப்பில் உருவாகியுள்ள பிளடி பெக்கர் திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குநர் நெல்சன் திலீப் குமார் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன்பின் டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கினார்.
ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வசூலைக் குவித்து ஆச்சரியப்படுத்தியது. இவர் அடுத்ததாக, ஜெயிலர் – 2 படத்தை இயக்கும் திட்டத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் நெல்சன் ‘ஃபிளமெண்ட் பிக்சர்ஸ்’ (filament pictures) என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ளதாக அறிவித்தார்.
இவரின் முதல் படத்தில் நாயகனாக நடிகர் கவின் நடிக்கிறார். இப்படத்திற்கு ‘பிளடி பெக்கர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் சிவபாலன் முத்துகுமார் எழுதி இயக்கும் இப்படத்துக்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். மேலும், இப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி பிரதான வேடத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில், பிளடி பெக்கர் திரைப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சிவகார்த்திகேனின் அமரன் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், கவினின் பிளடி பெக்கர் படமும் தீபாவளி ரேஸில் இணைந்துள்ளது.