“சிவகார்த்திகேயன் ஸ்கிரிப்ட்ஸ்லாம் ரொம்ப சரியாகத் தேர்ந்தெடுக்கிறாரு!” – மணி ரத்னம் |”Sivakarthikeyan chooses scripts very well!” – Mani Ratnam

Spread the love

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் மணி ரத்னம், சுதா என்கிட்ட ‘ஆயுத எழுத்து’, ‘யுவா’ என ரெண்டு படங்களிலும் வேலை செஞ்சாங்க. அந்தப் படங்கள்ல அவங்க கண்டினியூட்டி இன்சார்ஜ்.

எப்போதும் கையில ஒரு கேமரா இருக்கும். நிறைய ஆர்ட்டிஸ்ட், நிறைய ஹீரோக்கள், நிறைய ஹீரோயின்கள்கூட வேலை பார்த்தாங்க.

ஆனால் ஒரு ஆர்ட்டிஸ்ட் கூட சுதாகிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது. ஷூட்டிங் முடிஞ்சு வெளிய போனால்கூட சுதாவைத் தாண்டித்தான் போக முடியும்.

கண்டினியூட்டி தவறுகளைப் பார்த்துவிட்டுத்தான் விடுவாங்க. அப்போதே சுதாவைப் பார்த்து பயப்படாத ஆர்ட்டிஸ்ட்டே கிடையாது.

அப்போவே அப்படின்னா, இப்போ சொல்லவே வேண்டாம். சிவகார்த்திகேயன் ஸ்கிரிப்ட்ஸ்லாம் ரொம்ப சரியாகத் தேர்ந்தெடுக்கிறார். Wishing you a very very best!” என்றதும் சிவகார்த்திகேயன் எழுந்து நின்று நன்றி தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *