‘நீங்கள் தானே அழைத்தீர்கள், நீங்க யாரு, என்ன கேட்கிறீர்கள்’? என்று கேட்டேன்.
‘என் கணவனுக்கு இரண்டு முறை போன் செய்திருக்கிறீர்கள்? நீங்க யாருங்க? என்று மறுபடியும் அதே கோபமான குரல்.
‘என் கணவனுக்கு இரண்டு முறை போன் செய்திருக்கிறீர்கள்’ என்ற வார்த்தைகள் எனக்குள் ஒரு வெளிச்சத்தைக் கொடுத்தது. நீங்கள்தானே நம்பர் கொடுத்து உங்கள் கணவரை அழைக்கச் சொன்னீர்கள் என்று கேட்டவுடன் போன் துண்டிக்கப்பட்டது. அடுத்த வார்த்தை இல்லை.
நான் அந்த பெண்மணிக்கு உதவிதானே செய்தேன். அந்தப் பெண்மணியின் கணவருக்கு நிச்சயமாக 70 வயதுக்கு மேல் இருக்கும். இந்த வயதிலும் சந்தேகமா?
அடுத்தடுத்த வீடுகளில் இருக்கிறோம். மறுபடியும் மாடிப்படிகளில், லிப்ட்டில் ஏறும்போதும் இறங்கும் போதும் பார்க்கவேண்டியிருக்கிறது.
நான் ஏதோ தவறு செய்ததுபோல் விலகிச் செல்கிறேன். இனி யாருக்கும் உதவி செய்யக்கூடாது என்ற எண்ணம் எனக்கு வந்துவிட்டது.
-விஜயலட்சுமி சங்கரன்