சிவராமன் மரணத்தில் சந்தேகம் இல்லை – சீமான்

Dinamani2f2024 08 232fazm2d81g2fseeman.jpg
Spread the love

பாலியல் வழக்கில் கைதான சிவராமன் மரணத்தில் தங்களுக்கு சந்தேகம் இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், குற்ற உணர்வில் தற்கொலை செய்து இறந்துபோனார் சிவராமன். இந்த மனவேதனையில் அவரது அப்பா மது அருந்தி சாலையில் விழுந்து இறந்துவிட்டார்.

சிவராமன் குற்றச்செயலில் ஈடுபட்டது தெரிந்ததும் அவரைக் காவல் நிலையத்தில் பிடித்துக் கொடுத்ததே நாம் தமிழர் கட்சியினர்தான். நான் சாகப்போகிறேன் என்னை மன்னித்து விடுங்கள் என கடிதம் எழுதியிருந்தார்.

அதைக் கட்சி தம்பிகளிடம் கொடுத்து விசாரிக்க சொன்னேன். தான் செய்தது தவறு என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளார். இதில் எங்களுக்கு சந்தேகம் இல்லை. இது தற்கொலைதான். இதற்கு பின்னால் யாரும் இல்லை என்றார்.

கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பயிற்சியாளா் சிவராமன் உயிரிழந்த நிலையில், அவரது தந்தை சாலை விபத்தில் பலியானதாக போலீஸார் தெரிவித்தனர்.

வழக்கில் தொடர்புடைய சிவராமன், அவரது தந்தை மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகியோர் குற்றஞ்சாட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *