இந்நிலையில் இந்த பட பூஜையில் சிவகார்த்திகேயன் குறித்து ஜாலியாகப் பேசியிருக்கும் தயாரிப்பாளர் சினிஷ், “ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி ‘வேட்டை மன்னன்’ படத்தோட சமயத்தில சிவா கிட்ட ஏதோவொன்னு சொல்லி அவர் மனச கஷ்டப்படுத்திட்டேன். அதுனால் ரெண்டு பேரும் கிட்டத்தட்ட 10 வருஷம் பேசிக்கல.
என்னோட இணை தயாரிப்பில் வந்த ‘பார்க்கிங்’ படம் தேசிய விருது வாகியபோது தயக்கமில்லாமல் என்னைப் பாராட்டினார் சிவா.” என்றார்.

தயாரிப்பாளர் சினிஷும் இயக்குநர் நெல்சனும் காலேஜ்மேட்ஸ். சிவகார்த்திகேயன், சினிஷ் எல்லாரும் ‘வேட்டை மன்னன்’ படத்தில் உதவி இயக்குநர்களாக வேலை பார்த்தவர்கள்.
அந்த நேரத்தில் சினிஷ், ‘உங்களுக்கு என்ன ஆகனும்னு ஆசை’ என சிவாவிடம் கேட்டிருக்கிறார். அதற்கு சிவா, ‘ஹிரோ ஆகனும்னு’ ஜாலியாகச் சொல்லியிருக்கிறார்.
உடனே சினிஷ் “எதுக்கு உங்களுக்கு இந்த வேலைலாம். உங்களுக்கு டைமிங் நல்லா வருது. சைட்ல காமெடி ரோல் பண்றதுக்கு ஆசைப்பட்டால் ஓகே”னு சொல்லியிருக்கிறார்.
அதற்கு சிவா, “ஏன், நாங்களெல்லாம் ஹீரோவாகக் கூடாதா?”னு கேட்டிருக்கிறார்.
இடையில் இவர்கள் ஒரு 10 வருடம் பேசாமல் இருந்திருக்கின்றனர்.
சிவகார்த்திகேயன் ஹீரோவானதற்குப் பிறகு “அன்னைக்கு பேசினதை மனசுல வச்சுக்காதீங்க’னு சொல்லியிருக்கிறார் சினிஷ். ஆனால், “அதையெல்லாம் நான் மனசுல வச்சுக்கல. நடிப்பில் கொஞ்சம் பிஸியாகிட்டதால நாங்க பேசிக்க முடியல” என்று சிவா இந்த படபூஜை நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.
சிவகார்த்திகேயன், சினிஷ் இடையேயான இந்த கலகல பேச்சு சினிமா வட்டாரத்தில் வைரலாகி வருகிறது.