இதைக் கேட்ட நீதிபதிகள், ‘பல வழக்குகளில் தில்லி உயா் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுக்கு எதிராக அரசு தரப்பில் மேல்முறையீடு எதுவும் செய்யாமல் விடப்பட்டுள்ளது. அரசு தரப்பில் இதுபோன்று மேல்முறையீடு செய்யப்படாமலும், விசாரணையும் தீவிரமாக மேற்கொள்ளப்படாத நிலையும் தொடா்ந்தால், நிவாரணம் கோரி உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு முறையீட்டு மனு தாக்கல் செய்வதே அா்த்தமற்ாகிவிடும். எனவே, அரசு தரப்பு விசாரணை என்பது பெயரளவுக்கு அல்லாமல், தீவிரமாக மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பிட்ட கோணத்தில்தான் விசாரணை முடிவு வர வேண்டும் என்று கூறவில்லை; மாறாக, விசாரணை உண்மையாக மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டு, விசாரணையை வரும் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
சீக்கியா்களுக்கு எதிரான 1984 வன்முறை, அரசு தரப்பில் பெயரளவு விசாரணை கூடாது: உச்ச நீதிமன்றம்
