சீக்கிரம் கிளம்பிய மெஸ்ஸி; கொதிப்படைந்த கொல்கத்தா ரசிகர்கள்! – என்ன நடந்தது?|Why Did Messi Exit Early? Angry Kolkata Fans React Strongly

Spread the love

பிறகு கொல்கத்தாவில் சால்ட் லேக் மைதானத்துக்கு இன்று (டிச. 13) காலை 11.15 மணியளவில் சென்றார். சால்ட் லேக் மைதானத்தில் மெஸ்ஸியை காண தலா ரூ. 5,000 முதல் ரூ. 25,000 கட்டணமும் வசூலிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், மைதானத்திற்கு வந்த மெஸ்ஸி, சிறிது நேரத்திலேயே அங்கிருந்து சென்றிருக்கிறார்.

மேலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் மெஸ்ஸியை சுற்றி இருந்ததால் மைதானத்தில் இருந்த ரசிகர்களால் மெஸ்ஸியை பார்க்க முடியவில்லை.

அவரைச் சரியாக பார்க்கக் கூட முடியவில்லை என்று கோபமடைந்த ரசிகர்கள் பொருட்களை எறிந்தும், மைதானத்திற்குள் புகுந்து ஏற்பாடுகளை சேதப்படுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த சம்பவத்திற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மெஸ்ஸி மற்றும் அவரது ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

“இன்று சால்ட் லேக் மைதானத்தில் நடந்த சம்பவம் குறித்து ஆழ்ந்த கவலையும், அதிர்ச்சியும் அடைந்துள்ளேன். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மைதானத்திற்கு செல்லும் வழியில் ஆயிரக்கணக்கான விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் லியோனல் மெஸ்ஸியைப் பார்க்க கூடியிருந்தனர். இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்காக லியோனல் மெஸ்ஸி மற்றும் அவரது ரசிகர்களிடம் நான் உண்மையிலேயே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *