சீ​தா​ராம் யெச்​சூரி​யின் முதலா​மாண்டு நினைவு தினம்: மார்க்​சிஸ்ட் கட்​சி​யினர் உடல் தானம்  | Marxist party members donate bodies for Sitaram Yechury first death anniversary

1376343
Spread the love

சென்னை: சீதா​ராம் யெச்​சூரி​யின் முதலா​மாண்டு நினைவு தினத்​தையொட்டி மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யினர் உடல் தானம் செய்​தனர். மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் சார்​பில் சீதா​ராம் யெச்​சூரி​யின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று தமிழகம் முழு​வதும் அனுசரிக்​கப்​பட்​டது.

இதையொட்​டி, சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்​யூனிஸ்ட் அலுவல​கத்​தில் உடல் தானம் இயக்​கம் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்​தது. மாநில தலை​வர் பெ.சண்​முகம் முதல் நபராக உடல் தானம் செய்த உறுதி மொழி படிவத்தை வழங்​கி​னார்.

தொடர்ந்​து, தலைமை குழு உறுப்​பினர்​கள் கே.​பால​கிருஷ்ணன், வாசுகி, மத்​திய குழு உறுப்​பினர்​கள் சம்​பத், பால​பார​தி, மாவட்ட செய​லா​ளர்​கள் ராமகிருஷ்ணன், வேல்​முரு​கன், செல்வா உள்​ளிட்​டோர் உடல் தானம் செய்த உறு​தி​மொழி படிவத்தை தமிழ்​நாடு மாற்று அறுவை சிகிச்சை ஆணை​யத்​தின் உறுப்​பினர் செயலர் என்​.கோ​பாலகிருஷ்ணனிடம் வழங்​கினர்.

ஆராய்ச்சிக்கு பயன்படும்: சென்​னை, கோவை, ஈரோட்​டில் 350-க்​கும் மேற்​பட்​டோர் நேற்று உடல் தானம் செய்​தனர். தமிழகம் முழு​வதும் ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட நிர்​வாகி​கள் உடல் தானம் செய்​தனர்.

நிகழ்ச்​சி​யில் கே.​பால​கிருஷ்ணன் பேசி​ய​தாவது: இந்​தி​யா​விலேயே ஒரு தலை​வரின் நினைவு நாளை உடல் தானம் வழங்​கி, மருத்​து​வத்​துறையை புத்​துணர்ச்​சி ​யூட்​டும் நிகழ்ச்​சி​யாக நடத்​தப்​பட்​டது இதுவே முதல்​முறை. ஒரு​வர் இறந்​து​விட்​டால் அவர் இந்து மதமாக இருந்​தா​லும் வேறு எந்த மதமாக இருந்​தா​லும், அவரது உடலை உடற்​ கூ​ராய்​வுக்கு பயன்​படுத்த கூடாது என்ற தத்​து​வக் கோட்​பாடு இந்த நாட்​டில் நீண்ட கால​மாக இருக்​கிறது.

அந்த கோட்​பாட்​டுக்கு மாற்​றாக தான், மனிதன் இறந்த பிறகும் அவனது உடல் இந்த உலகுக்கு பயன்​படுத்த முடி​யும் என்ற அடிப்​படை​யில் தற்​போது இந்த உடல் தானம் நிகழ்வு நடை​பெற்​றுள்​ளது. உடல் தானம் செய்​வதன் மூலம், இந்த உடல் மண்​ணுக்கு போய் வீணாவதை விட, மருத்​து​வத்​துறைக்​கும், புதிய ஆராய்ச்​சிக்​கும் பயன்​படும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *