சீதாராம் யெச்சூரியின் உடலுக்கு நாளை மறுநாள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம்!

Dinamani2f2024 09 122fik2nqk8q2fpti09 12 2024 000110a.jpg
Spread the love

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி (72) சுவாச நோய் தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று (செப்டம்பர் 12) காலமானார். இதைத் தொடர்ந்து யெச்சூரியின் உடல், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், சீதாராம் யெச்சூரியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தில்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி தலைமையகத்தில் செப்.14-ஆம் தேதி வைக்கப்படுமென அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

செப்.14-ஆம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *