தெற்கு சீனாவில் உள்றள குவாங்டாங் மாகாணத்தின் சில பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களா வரலாறு காணாத மழை , வெள்ளப்பெருக்கு மற்றும் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. கடந்த மாத தொடக்கத்தில் மீஜோவில் உள்ள சில கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. தொ£டர்ந்து அந்த பகுதியில் கனமழை அவ்வப்போது பெய்து வந்தது.
சாலை இடிந்து விழுந்தது
இந்த நிலையில் தெற்கு குவாங்டாங் மாகாணத்தில் மீலாங் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையின் ஒரு பகுதி சுமார் 58.7 மீட்டர் நீளத்திற்கு துண்டாக மண்ணோடு இடிந்து சாலையோர பள்ளத்தில் சரிந்தது.
அந்த நேரத்தில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த 18 கார்கள் சாலை சரிவில் சிக்கி உருண்டு விழுந்தது.
இந்த விபத்தில் இதுவரை 24 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 30&க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அங்குள்ள செய்தி ஊடகங்கள் தகவல் தெரிவித்து உள்ளன.
தீ விபத்து
இந்த விபத்து குறித்து அங்குள்ள நிர்வாக தரப்பில் இன்னும் அறிக்கை எதுவும் வெளியாகவில்லை. சீன அரசு ஊடகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. நெடுஞ்சாலை இடிந்து விழுந்ததையடுத்து அதன் கீழே உள்ள மலைப் பகுதிகளில் உள்ள பெரிய எரிவாயு குழாயில் கசிவு ஏற்பட்டு தீப்பற்றி உள்ளன.
இதனால் பல இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. அதனை ஊழியர்கள் கட்டுப்படுத்தி உள்ளனர். அந்த பகுதி முழுவதும் கரும்புகை போல காட்சி அளிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.