சமீபத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார் கனடாவின் பிரதமர் மார்க் கார்னி.
இந்தச் சந்திப்பிற்கு பிறகு, “கனடா மற்றும் சீனா – இரு நாடுகளுக்கு இடையே உள்ள வர்த்தக தடை, வரிப் பிரச்னை ஆகியவைகளைக் குறைக்கும் “மைல்கல்’ வர்த்தக ஒப்பந்தத்தின் முதல்நிலையை அடைந்துள்ளோம்” என்று கூறினார் கார்னி.
‘ஒப்பந்தம்’ என்று கார்னி குறிப்பிட்டது, சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் என்று பொருள் கொள்ளப்பட்டது.
இது அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

இதனால், சீனா உடன் கனடா ஒப்பந்தம் போட்டால், அமெரிக்காவிற்குள் வரும் அனைத்து கனடா பொருள்களுக்கும் உடனடியாக 100 சதவிகித வரி விதிக்கப்படும் என்று எச்சரித்தார் ட்ரம்ப்.
உடனே, ட்ரம்ப்பின் கூற்றிற்கு விளக்கம் அளிக்கும் வகையில் பேசியுள்ளார் கார்னி…
“சீனா உடன் எந்த ஒப்பந்தத்தையும் நாங்கள் போடவில்லை. கடந்த சில ஆண்டுகளாக, இரு நாடுகளுக்கும் இடையே உள்ள அதிக வரி, வர்த்தக தடைகள் குறித்து தான் பேசியிருக்கிறோம்”.
இது கிட்டத்தட்ட ‘பேக்’ அடித்தல் என்றே எடுத்துக்கொள்ளலாம்.