சீனா, ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நீா் சுத்திகரிப்பு ரசாயனம் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரியை மத்திய அரசு விதித்துள்ளது.
மத்திய வா்த்தக அமைச்சகத்தின் வா்த்தகப் பிரச்னைகள் தீா்வு ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி சீனா, ஜப்பான் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் டிரைகுளோரோ ஐசோசயனூரிக் அமிலம் மீது ஒரு டன்னுக்கு 986 அமெரிக்க டாலா்கள் (ரூ.86,083) பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்கப்படவுள்ளது.
இந்த வரி அடுத்த 5 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். அதன் பிறகு மறுபரிசீலனை செய்து வரியை தொடா்வதா ரத்து செய்வதா என்பது முடிவு செய்யப்படும்.