சீனா : e-b-4 Visa – என்றால் என்ன?|India Opens e-B-4 Visa Door for Chinese Business Investments

Spread the love

சீன பிசினஸ்மேன்களுக்கு e-b-4 விசா (e-Production Investment Business Visa) திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது இந்தியா.

இந்தத் திட்டம் கடந்த 1-ம் தேதியில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது?

இது முழுக்க முழுக்க ஆன்லைன் விசா திட்டம் ஆகும். ஏஜென்டுகள் இல்லாமல், தூதரகத்திற்குச் செல்லாமல் இந்த விசாவிற்கு ஆன்லைனிலேயே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு இந்த விசா 45 – 50 நாள்களில் கிடைத்துவிடும். e-b-4 விசா பெற்றவர்கள் 6 மாதங்கள் வரையில் இந்தியாவில் தங்கலாம்.

https://www.nsws.gov.in/ – இதுதான் விண்ணப்பிப்பதற்கான லிங்க்.

மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்

மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்

என்ன பயன்?

இந்த விசா மூலம் இந்தியா வரும் சீன பிசினஸ்மேன்கள் இங்கே உபகரணங்களை நிறுவுதல், இயக்குதல், தரத்தை செக் செய்தல், மெயின்டனன்ஸ், உற்பத்தி, பயிற்சி போன்றவற்றை இங்கே செய்யலாம்.

இந்த விசா மூலம் இந்தியா – சீனா உறவை வலுப்படுத்த நினைக்கிறது இந்திய அரசு. மேலும், இது இந்தியாவிற்குள் முதலீடுகளைக் கொண்டுவரும். மேலும், இது இந்தியாவின் உள்கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்.

இந்தியாவின் இந்த முயற்சியை சீன அரசும் பாராட்டியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *