சீன நிலச்சரிவில் 30 பேர் மாயம்! தேடும் பணி தீவிரம்!

Dinamani2f2024 072f08103ce3 Aacf 493b 958d 08715e930d962friverpti07 30 2024 000593a.jpg
Spread the love

தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய மாயமானோரைத் தேடும் பணி அந்நாட்டு மீட்புப் படையினரால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சீனாவின் தென்மேற்கிலுள்ள ஸிசூவான் மாகாணத்தில் இன்று (பிப்.8) திடீரென ஏற்பட்ட நிலச்சரிவினால் 10க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் அவசரக்கால மேலாண்மை அமைச்சகத்தின் சார்பில் நூற்றுக்கணக்கான மீட்புப் படை வீரர்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டு மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது வரை மண்ணுக்குள் புதைந்த 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், நிலச்சரிவினால் மாயமாகியுள்ள 30க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: 15 தலிபான் தீவிரவாதிகள் கைது!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *