Blast-u Blast-u…
ஜனநாயகன் படத்தில் வெளியான பாடலில் இடம் பிடித்திருந்த, Blast-u Blast-u… வரிகள் வைரல். தவெக கூட்டத்தில் கூட விஜய் இந்த வார்த்தைகளை பேசி இருப்பார். இப்போது, கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் அதே Blast-u Blast-u வசனம் இடம் பெற்றதால் தொடரை முடிக்கச் சொல்லி விட்டார்களாம் என்கிறார்கள்.
கலைஞர் டிவியில் இரவு 7.30 க்கு ஒளிபரப்பாகி வந்த சீரியல் “ருத்ரா’… த்ரில்லர் டைப் கதை. கடந்த மாதம் தான் நூறு நாள்களைத் தாண்டியது. குறைந்த பட்சம் இன்னும் ஒரு வருடத்துக்காவது தொடர் போகும் எனச் சொன்னார்கள் சீரியல் யூனிட்டிலிருந்தவர்கள்.
இந்தச் சூழலில் திடீரென தற்போது தொடரை முடிக்கச் சொல்லி விட்டார்கள் என்கிற பேச்சு சின்னத்திரை வட்டாரத்தில் கேட்க, தொடர் சம்பந்தப்பட்ட சிலரிடம் பேசினோம்.
”அப்படிதான் சொல்றாங்க. நீங்க, தொடரில் ஹீரோயின் கணவரா நெகடிவ் கேரக்டரில் நடிக்கிறாரே அருண்கிட்ட கேளுங்க, டீடெய்லா சொல்வார்’ எனச் சொல்ல, அருணிடமே பேசினோம்.்

”சீரியலின் கதையில நான் வில்லன். இப்ப நிஜமாகவே வில்லனாகிட்டேனு நினைக்கிறேன். கலைஞர் டிவி சீரியல்ல இதுக்கு முன்னாடி கூட நடிச்சிருக்கேன். இந்த முறை சேனல் வேற கண்ணோட்டத்துடன் பார்க்குதுன்னு நினைக்கேன்.
‘ஜனநாயகன்’ படத்துல நான் நடிச்சிருக்கேன். மத்தபடி நான் அதிகாரபூர்வமா தவெகவுல இன்னும் சேரலை. ஜனநாயகன்ல நடிக்கறதுக்கு முன்னாடியே பொதுவான விஷயங்களில் என் கருத்தை ஓபனாப் பேசியிருக்கேன். அது அரசியல் சார்ந்த விஷயம்னாலும், ‘ஜனநாயகன்’ படத்துல கமிட் ஆனப்ப, கொஞ்ச நாளைக்கு வீடியோ போடறதை நிறுத்திக்கங்கனு சொன்னாங்க. அதனால சரின்னு நானும் வீடியோ போடலை. ஆனா என் கருத்தை தைரியமா சொல்றதுல எனக்கு எந்தப் பயமும் எப்பவும் இருந்தது கிடையாது.