ராஜேஸ்வரி வெள்ளித்திரை, சின்னத்திரை எனத் தொடர்ந்து பயணித்து வந்திருக்கிறார். ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு 2 பெரிய பிள்ளைகள் இருக்கிறார்கள்.
தன் கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக தன்னுடைய தாய் வீட்டில் தங்கியிருந்திருக்கிறார் ராஜேஸ்வரி. இந்நிலையில் நேற்று அளவுக்கதிகமாக ரத்த அழுத்த மாத்திரையை எடுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. அவரை மீட்டு சைதாப்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றிருக்கிறார்கள். அங்கே சிகிச்சை பலனளிக்காமல் ராஜேஸ்வரி உயிரிழந்தார்.

அவருடைய மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பலரும் ராஜேஸ்வரியின் மறைவுக்கு இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர்.
இரங்கல்கள் ராஜேஸ்வரி!