சீர்திருத்தவாதிகளில் முதன்மையானவர் பெரியார்: வைக்கம் நினைவகம் திறப்பு விழாவில் பினராயி விஜயன் புகழாரம் | Pinarayi Vijayan praises Periyar

1343097.jpg
Spread the love

சென்னை: ‘சமூக சீர்திருத்தவாதிகளில் முதன்​மை​யானவர் பெரி​யார்’ என்று பெரி​யார் நினை​வகம் திறப்பு விழா​வில் கேரள முதல்வர் பினராயி விஜயன் புகழாரம் சூட்​டி​னார்.

கேரள மாநிலம், கோட்​டயம் மாவட்​டம், வைக்​கத்​தில், நேற்று நடைபெற்ற வைக்கம் போராட்​டத்​தின் நூற்​றாண்டு நிறைவு விழா​வில், பெரி​யார் நினை​வகம், நூலகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்​டா​லின் திறந்து வைத்​தார். விழாவுக்கு தலைமையேற்று கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசி​ய​தாவது: சமூக சீர்​திருத்​தவா​தி​களில் முதன்​மை​யானவர் பெரி​யார். கேரள மக்கள் நாராயணரை ‘குரு’ என்று அழைப்​பது​போல், தமிழக மக்கள் ஈ.வெ.ராவை ‘பெரி​யார்’ என்று அழைக்​கின்​றனர். ‘பெரிய’ ஆள் என்ற சொல்​தான் பெரி​யாராக மாறியது. சுதந்​திரம் மற்றும் சமூக சீர்​திருத்த சிந்​தனை​யாளரான பெரி​யார், உழைப்​பாளி வர்க்​கத்​தினர், கம்யூனிஸ்ட் அமைப்​பினருடன் இணைந்து போராட்​டங்களை முன்னெடுத்​தார். எம்.சிங்​கார​வேலு, ப.ஜீவானந்தம் ஆகியோ​ருக்கு மிக நெருங்கிய நண்பராக இருந்​தார்.

கடந்த 1952-ல் தமிழகத்​தில்கம்யூனிஸ்ட் கட்சி​யின் வெற்றிக்கு பெரி​யாரின் பங்களிப்பு நாம் அனைவரும் அறிந்த விஷயம். மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் உருவான​போது, பொலிட்​பீரோ உறுப்​பினர்​களில் ஒருவராக நியமிக்​கப்​பட்ட பி.ராமமூர்த்தி​யின் திரு​மணத்​துக்கு தலைமை தாங்​கியது பெரி​யார்​தான். அந்த அளவுக்கு தமிழகத்​தில் கம்யூனிஸ்ட் கட்சி​யினருக்​கும், பெரி​யாருக்​கும் நெருங்கிய தோழமை இருந்​தது.

அவர் தனது சீர்​திருத்த கொள்​கைகளை மக்களிடம் கொண்டு செல்​வதற்​காகத்​தான் ‘குடியரசு’ என்ற பத்திரி​கை​யை தொடங்​கினார். கடந்த 1970-ல் திராவிட கட்சி​யால் தொடங்​கப்​பட்ட ‘உண்மை’ என்ற பத்திரி​கை​யில், பெரி​யார், ‘ஜனநாயக நாட்​டில் உயர்ந்​தவர், தாழ்ந்​தவர் என்று யாரும் இல்லை, அனைவரும் சமமே’ என்று எழுதினார். சாதி, மத, நிற வேறு​பாடுகளை ஒழிப்​ப​தற்கான போராட்டமே ‘வைக்கம் போராட்​டம்’. அனைத்து உரிமை​களும் அனைவருக்​கும் கிடைக்க வேண்​டும் என்பதே ‘சமதர்​மம்’ என்று பெரி​யார் முழங்​கினார்.

வைக்கம் கோயி​லின் சுற்றுப்​பாதை தடை விலக்​கப்​பட்டது மலையாள மக்களுக்கு மட்டுமே. ஆனால், இதை மலையாள மக்களுக்​கான, திரு​வி​தாங்​கூருக்கான பிரச்​சினை​யாக கருதாமல் ஒரு நாட்​டின் பிரச்​சினை​யாக கருதி போராடிய​வர்கள் பெரி​யார் மற்றும் இதர போராட்​ட​வா​தி​கள். தேச தலைவர்கள் மற்றும் சீக்​கியர்​களும் இந்த போராட்​டத்​தில் பங்கேற்​றனர்.

எனவே, எல்லை தாண்டிய சகோதரத்து​வ​மும், ஒத்துழைப்பும் இந்த போராட்​டத்​தில் நம்மால் பார்க்க முடிகிறது. அந்த மனநிலை​மையை கேரளா​வும், தமிழக​மும் இன்றும் தொடர்ந்து வருகிறது. தமிழகத்​தின் பிரச்​சினை​யில் கேரளா​வும், கேரளா​வின் பிரச்​சினை​யில் தமிழக​மும் ஒன்றுக்​கொன்று கைத்​தாங்​கலாக செயல்​படு​கிறது. சகோதரத்து​வம், ஒத்துழைப்​புக்கு எடுத்​துக்​காட்டாக இந்த மாநிலங்கள் உள்ளன. இதை பிற மாநிலங்கள் பின்​பற்றினாலும், தனிப்​பட்ட சுயமரி​யாதை​யும் காப்​பாற்​றப்பட வேண்​டும். தமிழக​மும், கேரளா​வும் இப்படித்​தான் நடந்து கொள்​கின்றன. இதை மேலும் வலிமை​யுடன் கொண்​டு​செல்ல இருமாநிலங்​களாலும் முடி​யும். இவ்வாறு அவர் பேசினார்.

விழா​வில், முன்னிலை வகித்த திரா​விடர் கழக தலைவர் கி.வீரமணி பேசும்​போது, ‘‘அரசி​யலமைப்புச் சட்டத்​தில் இருந்து தீண்​டாமை என்ற பதம் நீக்​கப்​பட்டு​விட்​டது. ஆனால், சாதி என்ற வார்த்தை நீக்​கப்​பட​வில்லை. இதுவும் நீக்​கப்பட வேண்​டும் என்பது பெரி​யாரின் விருப்​பம். அத​னால் சாதி என்ற வார்த்​தையை நீக்க அரசி​யலமைப்புச் சட்​டத்​தில் ​திருத்​தம் கொண்டு வரப்பட வேண்​டும். அவர் ​விரும்​பிய, சா​தி​கள் இல்லாத சமூகத்தை உரு​வாக்க நாம் அனை​வரும் தொடர்ந்து பாடுபட வேண்​டும்’’ என்​றார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *