ஒசாமு சுசூகியின் தலைமையின் கீழ், அந்நிறுவனம் உலக சந்தையில் விரிவடைந்தது. சுசூகி நிறுவனம் குறிப்பாக மினி கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு பெயர் பெற்றது.
1982 ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கத்துடன் ஒரு கூட்டு முயற்சியை உருவாக்கிய சுசூகி, மாருதி உத்யோக்கை உருவாக்கினார்.
இந்த நிறுவனம், மாருதி 800 என்ற சிறிய காரை அறிமுகப்படுத்தியது. அக்காலகட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே, இந்த வகை கார் இந்திய சந்தையில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதால், சுசூகிக்கு வலுவான நிலையை அடைந்தது.