சென்னை: இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கக் கூடிய வலிமை உள்ள சுதர்சன் ரெட்டிக்கு வாக்களிக்க வேண்டும் என விசிக தலைவர் தொல்.திருமாவளன் தெரிவித்தார்.
குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் இந்தியா கூட்டணி சாா்பில் போட்டியிடும் சுதா்சன் ரெட்டி ஞாயிற்றுக்கிழமை சென்னை வந்தாா். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பி.,க்களிடம் ஆதரவு திரட்டினாா்.