சிவகார்த்திகேயன் பேசுகையில், “‘சூரரைப் போற்று’ கதையைப் படிச்சிட்டு நான் சரியில்லைனு சொன்னதாக சுதா மேடமுக்கு ஒரு தகவல் போயிருக்கு.
என்கிட்ட ஸ்கிரிப்ட் கொடுத்ததாக சுதா மேமுக்கும் தகவல் போயிருக்கு. ஆனா, அந்த ஸ்கிரிப்ட் என்கிட்ட வந்து சேரவே இல்லை.” என்றதும் இயக்குநர் சுதா கொங்கரா, “அதெல்லாம் சும்மா சொல்றாருங்க!
அந்தக் கதையை அவர் படிச்சிட்டு ‘இது கஜினி மாதிரியான ஸ்கிரிப்ட்’னு சொன்னதாக தகவல் வந்துச்சு. ‘கஜினி’ மாதிரியான ஸ்கிரிப்ட்னா இதை அவர் பண்ணனும்தானேனு தோணுச்சு.” என்றார்.
மேலும் பேசிய சிவகார்த்திகேயன், “‘சிம்பு சாரை வச்சு முதல்ல ‘மாநாடு’ படத்தை எடுத்து நிறுத்தியிருந்தாங்க. அப்போ என்னை வச்சு அந்தப் படத்தைப் பண்ணச் சொன்னாங்க.
இந்தப் படம் நிச்சயம் ஹிட் ஆகும். அவரை வச்சே கண்டின்யூ பண்ணுங்கனு சொன்னேன். இதை அவரை வச்சு தொடங்கியாச்சு. இதை ஆரம்பிக்கலைனா, நம்ம டிஸ்கஸ் பண்ணியிருக்கலாம்.
நம்ம நெக்ஸ்ட் ஒரு படம் பண்ணலாம்னுங்கிறதுதான் ப்ளான். அது போல, சுதா மேம் கொடுத்த கதை பிடிக்கலைனாலும், ஏன் பிடிக்கலைனு சொல்லியிருப்பேனே! எனக்கு அந்த ரீச் ஆகவே இல்லை.” எனக் கூறினார்.