சுனிதா கேஜரிவாலின் அரசியல் பயணம் விரைவில் முடிவுக்கு வரும் என மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கேஜரிவால் சிறையில் உள்ள நிலையில், கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தால் ஜாமீன் பெற்ற மணீஷ் சிசோடியாக திகார் சிறையிலிருந்து வெளியே வந்தார்.
ஆத் ஆத்மி தலைமையகத்தில் செய்தியாளர்களுடன் சந்திப்பில் அவர் பேசியது..
கலால் கொள்கை வழக்கு தொடர்பாக கடந்த மார்ச் 21ல் கேஜரிவால் கைது செய்யப்பட்ட பிறகு சுனிதா அவருக்கும் கட்சிக்கும் இடையே ஒரு பாலமான பணியாற்றினார். மேலும் தில்லி, குஜராத் மற்றும் ஹரியாணாவில் மக்களவைத் தேர்தலுக்கான ஆம் ஆத்மியின் பிரசாரத்திலும் முக்கிய பங்கு வகித்தார்.