சுருக்கெழுத்தர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

Dinamani2f2024 072fe6cb6360 0c60 4e83 8d5d 1f4243947a612fani 20240724081047.jpg
Spread the love

ஹைதராபாத்தில் புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் இளநிலை சுருக்கெழுத்தர் (ஸ்டெனோகிராபர்) பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண். 06/2024

பணி: Junior Stenographer

காலியிடங்கள்: 4

சம்பளம்: மாதம் ரூ. 25,500 – 81,100

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு பயிற்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் என்ற வேகத்தில் சுருக்கெழுத்தில் எழுதும் திறன் மற்றும் கணியில் நிமிடத்திற்கு 50 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள், தட்டச்சு திறன் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு தொடர்பான அனைத்து விவரங்களும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர், பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.ngri.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.1.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *