மத்தியப் பிரதேசத்தில் சுற்றுலா புதுமணத் தம்பதியரைத் தாக்கி, பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில், புதிதாய் திருமணமான தம்பதியர் பைரவ பாபா கோயிலுக்கு அக். 21 ஆம் தேதியில் சென்றுள்ளனர். இந்த நிலையில், அந்தப் பகுதியில் மது அருந்தியிருந்த 8 பேர், சுற்றுலா சென்ற தம்பதியரைச் சுற்றி வளைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பெண்ணின் கணவரைப் பிடித்த கும்பலில் சிலர், அந்தப் பெண்ணை சிறிது தூரத்துக்கு இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்;
அதுமட்டுமின்றி, அதனை விடியோவும் எடுத்துள்ளனர். இந்த சம்பவத்தை காவல்துறையினரிடம் தெரிவித்தால், விடியோவையும் வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதனையடுத்து, அவர்களின் அச்சுறுத்தலுக்கு பயந்த தம்பதியினர் காவல்துறையினரிடம் புகார் எதுவும் அளிக்காமல் இருந்துள்ளனர்.