சுவாச நோய்களால் 9,211 பேர் உயிரிழப்பு; டெல்லி அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்|

Spread the love

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் ஆஸ்துமா, நிமோனியா, நுரையீரல் தொற்று மற்றும் காசநோய் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகியிருந்தது தெரியவந்துள்ளது.

குறிப்பாக, டெல்லியின் நச்சுக்காற்று மற்றும் குளிர்காலங்களில் நிலவும் கடுமையான பனி போன்றவை முதியவர்கள் மற்றும் குழந்தைகளின் நுரையீரலைப் கடுமையாகப் பாதிப்பதே இந்த உயிரிழப்புகள் அதிகரிக்க முக்கியக் காரணம்.

கடந்த ஆண்டில் டெல்லியில் பதிவான மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1.39 லட்சமாக உள்ளது.

டெல்லி காற்று மாசு | Delhi Air pollution

டெல்லி காற்று மாசு | Delhi Air pollution

இதில் இதய நோய்கள் உள்ளிட்ட பாதிப்புகளால் 21,262 பேரும், தொற்று நோய்களால் 16,060 பேரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஆண்களின் எண்ணிக்கை (85,391) பெண்களை விட அதிகமாக உள்ளது.

மேலும், பிறப்பு விகிதத்தின் அடிப்படையிலான பாலின விகிதம் 922-ல் இருந்து 920-ஆகக் குறைந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *