சூட்கேஸில் காங்கிரஸ் தொண்டரின் சடலம் கண்டெடுப்பு!

Dinamani2f2025 03 012f5ekknzxg2fscreenshot 2025 03 01 214838.png
Spread the love

ஹரியாணாவில் சூட்கேஸில் அடைக்கப்பட்ட பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அது காங்கிரஸ் தொண்டர் என தெரிய வந்துள்ளது.

ஹரியாணாவின் ரோடாக் மாவட்டத்தில் இன்று சாம்ப்லா பேருந்து நிலையம் அருகே சூட்கேஸில் அடைக்கப்பட்ட அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

சடலம் அடைக்கப்பட்ட சூட்கேஸை அவ்வழியே நடந்து சென்ற ஒருவர் முதலில் பார்த்ததாகக் கூறப்படுகிறது.

கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், அந்தச் சடலம் காங்கிரஸ் தொண்டரான ஹிமானி நர்வால் என்பவருடையது எனத் தெரிய வந்துள்ளது.

சாம்ப்லா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தியுடன் பங்குகொண்டவர் என்றும் காங்கிரஸ் கட்சியில் தீவிரமாகப் பணியாற்றியவர் என்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாரத் பூஷன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க | கன்னியாகுமரி: தேவாலய திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி

இந்தக் கொலை வழக்கில் உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா வலியுறுத்தியுள்ளார்.

“ஒரு பெண் கொலை செய்யப்பட்டு சூட்கேஸில் சடலமாக கண்டெடுக்கப்பட்டிருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த சம்பவம் மாநிலத்தின் சட்ட ஒழுங்கின் மீதான கறை. இந்த வழக்கில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு விரைவில் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்று ஹூடா தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *