அவரைப் பொறுத்தவரையில் ஒரு படத்தின் படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கும்போது அடுத்தடுத்த படங்களின் அறிவிப்புகளையும், எதிர்பார்ப்புகளைத் தூண்டுவதையும் பாணியாக வைத்துள்ளார். ‘வேட்டையன்’ சமயத்தில்தான் ‘கூலி’யின் அப்டேட் வெளியானது.
அதைப்போல ‘ஜெயிலர் 2’வில் இப்போது போல நெல்சன், அனிருத்தின் புரொமோ வீடியோவும் வெளியானது. ஏப்ரலில் ‘டான்’ சிபிசக்கரவர்த்தி இயக்கும் படத்திற்குச் செல்கிறார் ரஜினி. இப்படி ஆக, இந்தாண்டின் கடைசியிலோ அல்லது அடுத்தாண்டின் துவக்கத்திலோதான் கமல்ஹாசன் – ரஜினிகாந்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.
ரஜினி – நெல்சன் கூட்டணியின் மேஜிக் ரஜினி ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறது. இயக்குநர் எஸ்.முத்துராமனுக்குப் பிறகு அவரை வைத்து அதிகமாக இயக்கியவர் டைரக்டர்கள் ராஜசேகர், கே.எஸ்.ரவிக்குமார் என்பார்கள். ஆனால் ஒரே இயக்குநருக்குத் தொடர்ச்சியாக அடுத்தடுத்து படங்கள் கிடைத்திருப்பது நெல்சனுக்குதான் என்கிறார்கள்.
இப்போது ரஜினியின் காம்பினேஷனில் ஹாட் ரிக் அடித்திருக்கிறார் நெல்சன். எப்போதும் போல எல்லோரிடமும் கலகலப்பாகப் பேசி மகிழும் நெல்சன், படப்பிடிப்பில் அதே கலகலப்புடன், கோபம் கொஞ்சமும் இல்லாமல் அமைதியாக எல்லோரிடமும் இன்முகத்துடன் வேலை வாங்கும் ஸ்டைலும், சூப்பர் ஸ்டாரை அவர் ரொம்பவே சௌகரியமாக வைத்திருப்பதும்தான் இந்த வெற்றிக் கூட்டணிக்கான காரணம் என்கிறது ரஜினி வட்டாரம்.
கமல் – ரஜினியின் இந்தப் படத்தில் டெக்னீஷியன்கள் மட்டுமே இப்போது முடிவாகியிருக்கிறார்கள். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு, நிர்மல் எடிட்டிங், பல்லவிசிங், அம்ரிதா ராம் காஸ்ட்யூம்ஸ், சவுண்ட் டிசைனர்கள் எனச் சிலர் உறுதியாகியிருக்கிறார்கள். படத்தில் சூப்பர் ஸ்டார்கள் இணைந்திருந்தாலும், நெல்சனின் ஸ்டைலில் இதுவும் மல்டி ஸ்டார் படமாக ரெடியாகும் என்கிறார்கள்.