சூப்பர் 4 கடைசிப் போட்டி: இலங்கைக்கு 203 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!

dinamani2F2025 09 262Fn8nuim982FAP25269574905235
Spread the love

ஆசிய கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்றின் கடைசிப் போட்டியில் இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 202 ரன்கள் குவித்தது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றின் கடைசிப் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இன்று (செப்டம்பர் 26) விளையாடுகின்றன. துபையில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

இதனையடுத்து, இந்தியா முதலில் பேட் செய்கிறது. தொடக்க வீரர் அபிஷேக் சர்மா ஆரம்ப முதலே அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர் 31 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த திலக் வர்மா 49 ரன்கள், சஞ்சு சாம்சன் 39 ரன்கள் எடுத்தனர்.

பஹல்காம் தாக்குதல் குறித்த கருத்து: இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவிற்கு 30% அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது. ஏற்கெனவே இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் இந்த போட்டியின் முடிவு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

India have set a 203-run target against Sri Lanka courtesy of a good display by the batting line-up.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *