டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமாரின் சாதனையை முறியடித்தார் ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராஸா.
டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் ஜிம்பாப்வே அணி காம்பியா அணியுடன் இன்று (அக்.23) மோதியது. சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 344/4 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்தது ஜிம்பாப்வே அணி.
பின்னர் 14.4 ஓவர்களில் காம்பியா 54 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜிம்பாப்வே அணி 290 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சிக்கந்தர் ராஜா 43 பந்துகளில் 133 ரன்கள் எடுத்து அசத்தினார். இதில் 15 சிக்ஸர்கள் அடங்கும்.
அதிக முறை (17) ஆட்ட நாயகன் விருதுபெற்றவர் என்ற சாதனையை சிக்கந்தர் ராஸா பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் 16 முறை ஆட்ட நாயகன் விருது பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜிம்பாப்வே போன்ற ஒரு நாட்டின் வீரர் இந்த உலக சாதனை படைப்பது மிகப்பெரிய விஷயம் என கிரிக்கெட் வல்லுநர்கள் கூறி வருகிறார்கள்.
டி20யில் அதிகமுறை ஆட்டநாயகன் விருது பெற்றவர்கள்
சிக்கந்தர் ராஸா – 17
சூர்யகுமார் யாதவ் – 16
விராட் கோலி – 16
விராந்தீப் சிங் -16
ரோஹித் சர்மா – 14
!
First to hit a T20I century ✅
First to score across all formats ✅#SikandarRaza #PunjabKings pic.twitter.com/fhVgVEInqz— Punjab Kings (@PunjabKingsIPL) October 23, 2024