சூர்யகுமார் யாதவ் எனக்கு மெசேஜ் அனுப்பி கொண்டே இருப்பார்: பாலிவுட் நடிகை வெளியிட்ட சீக்ரெட் – Kumudam

Spread the love

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தயாராகி வருகிறது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் ஆட்டம் கடுமையான விமர்சனங்களை சந்தித்து. சமீபகாலமாக அவர் ரன் சேர்க்க திணறி வருகிறார். இந்நிலையில் சூர்யகுமார் யாதவ் உடன் பாலிவுட் நடிகை தொடர்பு குறித்து தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழ், தெலுங்கு, பாலிவுட் ரியாலிட்டி ஷோக்களில் நடித்து வருபவர் குஷி முகர்ஜி. இவர் பிரபல மாடலாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். சூர்யகுமார் யாதவ் தொடர்பாக குஷி முகர்ஜி பேசுகையில், கிரிக்கெட் வீரர்கள் பலரும் என்னை தொடர்பு கொண்டிருக்கிறார்கள். 

சூர்யகுமார் யாதவ் எனக்கு தொடர்ச்சியாக ஏராளமான மெசேஜ்களை அனுப்புவார். ஆனால் இப்போது நாங்கள் பெரிதாக பேசிக் கொள்வதில்லை. யாருடனும் இணைத்து என் பெயர் பேசப்பட வேண்டாம் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

சூர்யகுமார் – தேவிஷா ஷெட்டி திருமணம் 2016ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன்பின் இருவரும் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருகின்றனர். இப்படியான சூழலில் சூர்யகுமார் யாதவ் தனக்கு மெசேஜ் செய்ததாக பாலிவுட் நடிகை பேசி இருப்பது பாலிவுட் மற்றும் கிரிக்கெட் உலகில் புயலை கிளப்பி உள்ளது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *