சூறாவளி காற்று எதிரொலி: தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை!

Dinamani2f2024 072fa9fd7882 B0b8 4496 9a5e F15a44bd9b692fthuthukudi.jpg
Spread the love

தூத்துக்குடி: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்றானது வீசக்கூடும் என்பதால் விசைப்படகு மீனவர்கள் செவ்வாய்க்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

மன்னார் வளைகுடா கடல் பகுதி மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் பலத்த காற்று சுமார் 55 கி.மீ. முதல் 65 கி.மீ. வரை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதன்காரணமாக தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் செவ்வாய்க்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் எனவும், ஏற்கனவே கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்  பாதுகாப்பாக மீன்பிடிக்கவும் மீன்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் 280க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *