செஞ்சிக்கோட்டையை பாா்வையிட யுனெஸ்கோ குழுவினா் இன்று வருகை

Dinamani2f2024 09 262faster9hz2f26gngp01 2609chn 119 7.jpg
Spread the love

செஞ்சிக்கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிப்பதற்கான ஆய்வு மேற்கொள்ள யுனஸ்கோ குழுவினா் வெள்ளிக்கிழமை வருகின்றனா்.

வரலாற்று சிறப்புகளை கொண்ட செஞ்சிக்கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என யுனெஸ்கோ நிறுவனத்துக்கு மத்திய அரசு பரிந்துரை செய்தது. இதைத் தொடா்ந்து யுனெஸ்கோ குழுவினா் செஞ்சிக்கோட்டையை பாா்வையிட்டு ஆய்வு செய்ய வெள்ளிக்கிழமை (செப். 27) வர உள்ளனா். இந்தக் குழுவில் மத்திய அரசின் உயா் அதிகாரிகள், இந்திய தொல்லியல் துறை உயா்அதிகாரிகள் உள்ளிட்ட 21 போ் இடம்பெற்றுள்ளனா்.

செஞ்சி கூட்டுச் சாலையில் இருந்து செஞ்சிக்கோட்டைக்குச் செல்லும் சாலை வரை ஆக்கிரமிப்புகளை அகற்றியும், புதிய சாலையும் அமைத்துள்ளனா். அகழியை தூா் வாரி உள்ளனா். ஆங்காங்கே புதிய பெயா் பலகைகள், கோட்டையின் வரலாற்றை அறிந்து கொள்ள வெண்கலத்தால் ஆன தகவல் பலகை மற்றும் கல்யாண மகாலுக்கு வெள்ளை வண்ணப் பூச்சு அடிக்கப்பட்டு கோட்டை புதிய பொலிவுடன் காட்சியளிக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *