செந்தில் பாலாஜியை அமைச்சராக்கியதில் தவறில்லை: சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி கருத்து | nothing wrong in making Senthil Balaji a minister Law Minister S Regupathy

1342160.jpg
Spread the love

புதுக்கோட்டை: சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியை மீண்டும் அமைச்சராக்கியதில் தவறில்லை என்று தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த முறை ஏற்பட்ட புயல், வெள்ளப் பாதிப்பின்போது வழக்கமாக வழங்கப்படும் பேரிடர் நிதியைத்தான் மத்திய அரசு விடுவித்ததே தவிர, கூடுதலாக விடுவிக்கவில்லை. இந்த முறையாவது தமிழக முதல்வர் கோரிய நிவாரணத் தொகையை மத்திய அரசு விடுவிக்கும் என்று நம்புகிறோம்.

ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்குவதும், வழங்காமல் இருப்பதும் மாநில முதல்வரின் விருப்பம். அதில் யாரும் தலையிட முடியாது. செந்தில் பாலாஜி சிறைக்கு செல்வதற்கு முன்பே அமைச்சராகத்தான் இருந்தார். சிறையிலும் சிறிது காலம் அமைச்சராகத்தான் இருந்தார். சிறையில் இருந்து வந்த பிறகு, அவருக்கு மீண்டும் அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்ததில் எவ்வித தவறும் இருப்பதாக தெரியவில்லை.

மதுரை டங்ஸ்டன் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடவில்லை. நடைபெற உள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தில், டங்ஸ்டன் சுரங்கம் தேவையில்லை என்று தீர்மானம் நிறைவேற்ற உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *