செந்தில் பாலாஜி அனுபவித்த தொல்லைகளைப் போல வேறு யாரும் அனுபவிக்கவில்லை. ஆனாலும் , யாருக்கும் அடிபணியாமல், தலை வணங்காமல் கடைசி வரை நெஞ்சுரத்துடன் தைரியமாக எதிர்கொண்டார். கட்சிக்கும் தலைமைக்கும் உண்மையாக உழைத்து வருகிறார் செந்தில் பாலாஜி.

டெல்லி முதல்வராக இருந்த கெஜ்ரிவால் மீது பொய்வழக்கு போட்டு சிறையில் அடைத்தது பா.ஜ.க அரசு. அந்த வழக்கில் எந்தவித முகாந்திரம் இல்லை என நீதிமன்றம் அவரை விடுவித்திருக்கிறது. தங்களின் ஏவல் அமைப்புகளை வைத்து அதே ஃபார்முலாவை தமிழ்நாட்டிலும் செய்ய பார்க்கிறார்கள். அவர்களின் மிரட்டல் அரட்டலுக்கு அஞ்ச நாங்கள் அடிமையும் இல்லை கோழையும் இல்லை. தைரியமாக எதிர்கொள்வோம் ” என்றார்.