கரூர் நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பமாக நாளை டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் நடிகரும் தவெக தலைவரான விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பட்டுள்ளது. கூட்டணிக்காக தொடர் நெருக்கடி கொடுப்பதாக தவெகவினர் புகார் தெரிவித்துள்ளனர்.
கரூர் விஜய் பிரசாரத்தின் போது 41 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இது தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. டிசம்பர் மாத இறுதி வாரத்தில் 4 பேரும் டெலியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜராகினார். அப்போது சிபிஐ அதிகாரிகள் நடிகர் விஜய் கூட்டத்திற்கு தேவையான பணம் எங்கிந்து வருகிறது. உயிரிழந்த குடும்பத்திற்கு கட்சியின் சார்பில் அளிக்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது. நடிகர் விஜய் செலவு செய்கிறாரா? அல்லது கட்சியின் நிர்வாகிகளான ஆதவ் அர்ஜூனா மற்றும் புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர்.நிர்மல் குமார் செய்கிறாரா என்று கேட்டுள்ளனர்.
தவெக தலைவரான நடிகர் விஜய்க்கு சிபிஐ அதிகாரிகள் நேரில் ஆஜராக கடந்த ஜனவரி 6ம் தேதி சம்மன் அனுப்பினர். அதன்படி கடந்த ஜனவரி 12ம் தேதி நடிகர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானத்தில் டெல்லி சென்று, சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜரானார். இதை தொடர்ந்து 2-வது முறையாக ஜனவரி 19-ம் தேதி விஜய் ஆஜராகி சிபிஐ அதிகாரிகளிடம் விளக்கம் அளித்து இருந்தார்.
நடிகர் விஜய் தனது கட்சியின் வேட்பாளர் நேர்காணல் நாளை நடத்த உள்ளார். இந்த நிலையில் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் இருந்து நாளை நேரில் ஆஜராகும்படி விஜய்க்கு சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த சம்மனை தொடர்ந்து நடிகர் விஜய் நாளை சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராவாக விலக்கு அளிக்கும்படி கோரியுள்ளார்.
ஜனநாயகன் படத்திற்கு மறுதணிக்கை குழு இன்று திரைப்படத்தை பார்ப்பதாக இருந்தனர். ஆனால் திடீரென படத்தை பார்ப்பது தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு பாஜக கூட்டணிக்கு கொண்டு வர நேரடியாக சிபிஐ அதிகாரிகள் மூலம் அழுத்தம் அளிக்கப்படுவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
