மும்பை: இன்றைய வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தில், இந்திய பங்குச் சந்தையின் குறியீடு சற்று உயர்ந்து தொடங்கி, சற்று நேரத்தில், மீண்டும் சரிந்தது முடிந்தது.
அன்னிய முதலீட்டு தொடர்ந்து வெளியேறுவதாலும், ஐடி பங்குகளின் தொடர் பின்னடைவு மற்றும் அமெரிக்க சந்தைகளிலிருந்து வரும் பலவீன போக்குகள் ஆகிய காரணங்களால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்றும் சரிந்தது.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில், பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 156.72 புள்ளிகள் குறைந்து 77,423.59 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 64.25 புள்ளிகள் குறைந்து 23,468.45 புள்ளிகளாக இருந்தது.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாப் 30 பங்குகளில் இன்ஃபோசிஸ், டெக் மகேந்திரா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், என்டிபிசி, ஆக்சிஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்து வர்த்தகமானது. ஹெச்டிஎஃப்சி வங்கி, டாடா ஸ்டீல், பஜாஜ் பைனான்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து முடிந்தது.