சென்னைக்கு அலர்ட்! 11 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!

dinamani2Fimport2F20212F12F52Foriginal2FRains 1
Spread the love

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் நாளை கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கேரளத்தை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது.

இதனிடையே, கடந்த சில நாள்களாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்து வருகின்றது.

இந்த நிலையில், 11 மாவட்டங்களில் புதன்கிழமை கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஜூலை 18 ஆம் தேதி கோவை, நீலகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The Chennai Meteorological Department has issued a yellow warning for heavy rain tomorrow in 11 districts, including Chennai.

இதையும் படிக்க : கேரளத்தில் 5 மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *