சென்னையின் அழகை புகைப்படம் எடுத்து அனுப்பலாம்: மாநகராட்சி அறிவிப்பு!

Dinamani2f2025 03 162fkj2s7fg02fchennaicentral.jpg
Spread the love

சென்னையின் அழகை புகைப்படம் எடுத்து அனுப்பலாம் என பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

நாட்டிலேயே கொல்கத்தாவுக்கு அடுத்தபடியாக அதிக பாரம்பரிய சின்னங்களை கொண்ட நகரமாக சென்னை விளங்குகிறது. சென்னை சென்ட்ரல், எழும்பூா், ராயபுரம் ரயில் நிலையம், புனித ஜாா்ஜ் கோட்டை, ரிப்பன் மாளிகை என 2,000-க்கும் மேற்பட்ட பழங்கால கட்டடங்கள் உள்ளன.

இந்தக் கட்டடங்கள் பெரும்பாலும் சுமாா் 200 ஆண்டுகள் பழைமையானது எனக் கூறப்படுகிறது. மேலும், திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி கோயில், மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயில் என சோழா்கள் மற்றும் பல்லவா்கள் கால கோயில்கள் சென்னையில் அதிகமாக காணப்படுகின்றன.

பாரம்பரிய சின்னங்கள் முதல் நவீன கட்டடக்கலை வரையிலான சென்னையின் அழகை புகைப்படம் எடுத்து சென்னை மாநகராட்சிக்கு அனுப்பலாம் என மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையின் முக்கிய இடங்கள், தினசரி நிகழ்வுகள் மற்றும் காட்சிகளை புகைப்படம் எடுத்து இணையதளத்தில் பதிவிடலாம்.

அதில், சிறந்த புகைப்படங்கள் சென்னை மாநகராட்சியின் அதிகாரபூா்வ சமூகவலைதளப் பக்கத்தில் வாரந்தோறும் வெளியாகும் புகைப்படத் தொடரில் இடம்பெறும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *