சென்னையில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடுமென சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் சென்னையிலும் ஆங்காங்கே இரவு 10 மணி வரை இடி , மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.